கொல்கத்தா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் தினேஷ் கார்த்திக் – ஈயன் மோர்கன் நியமனம்!!

0

இந்த ஐபிஎல் 2020 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தினேஷ் கார்த்திக் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக இங்கிலாந்து உலகக்கோப்பை அணியின் கேப்டன் ஈயன் மோர்கன் நியமிக்கப்பட்டு உள்ளார். இத்தொடரில் 7 போட்டிகளில் 4 இல் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2020 க்கான கேப்டன் பதவியை ஈயோன் மோர்கனிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தினேஷ் கார்த்திக் இந்த சீசனில் ஏழு போட்டிகளில் ஒரு அரைசதம் உட்பட 108 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஐ.பி.எல்லின் இரண்டு சீசன்களுக்கு கொல்கத்தா அணியின் கேப்டன் ஆக தினேஷ் கார்த்திக் இருந்த போது, 2018 இல் நாக் அவுட், 2019 ல் ஐந்தாவது இடமும் பிடித்தது. இந்த ஆண்டு, கே.கே.ஆர் தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. மோர்கன் கொல்கத்தா அணியின் துணை கேப்டன் ஆக உள்ளார். அவரை கேப்டன் ஆக்குமாறு நீண்ட நாட்களாக ரசிகர்களும் கோரி வந்தனர்.

நீச்சல் குளத்தில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

இங்கிலாந்து அணிக்காக உலகக் கோப்பை வென்ற கேப்டன் மோர்கன் இன்று அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற உள்ள போட்டியில் இருந்து கேப்டன் பதவி ஏற்க உள்ளார். 2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கேப்டனாக நியமிக்கப்பட்ட மோர்கன், அணியை 126 ஒருநாள் போட்டிகளில் 77 வெற்றிகளுக்கும், 52 டி 20 போட்டிகளில் 30 வெற்றிகளுக்கும் கேப்டன் ஆக இருந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here