பிரபாஸ் நடிக்கும் ‘ராதே ஷ்யாம்’ – ஜூலையில் திரையரங்குகளில் வெளியீடு!!

0

தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தற்போது பிரபாஸ் நடிக்கும் படம் தான் ராதே ஷ்யாம். இந்த படம் தற்போது ஜூலையில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

ராதே ஷ்யாம்:

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் தான் பிரபாஸ். இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மேலும் இந்த படம் வசூலில் பல புதிய சாதனைகளை படைத்தது அசத்தியது. இந்த படம் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் இதன் சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இவர் லேட்டஸ்ட்டாக ராதே ஷ்யாம் என்னும் படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ராதா கிருஷ்ணன் இயக்கியுள்ளார். தமிழில் பாகுபலிக்கு பின்பு இவரது படம் வெளியாக போகிறது என்றால் அது ராதே ஷ்யாம் தான்.

விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ – இணையத்தில் வைரல்!!

இந்த படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது இத படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படம் வருகிற ஜூலை மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த தகவலினால் ரசிகர்கள் குஷி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here