விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ – இணையத்தில் வைரல்!!

0

தமிழ் திரையுலகில் லேட்டஸ்ட் காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன். விக்னேஷ் சிவன் பிறந்தநாளின் போது நயன்தாராவுடன் அவர் எடுத்த பழைய வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவரும் ரசித்து, சிலாகித்து வரும் பிரபல ஜோடிகள் பட்டியலில் தற்போது புதிதாக இணைந்துள்ளவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன். முன்னதாக அஜித் – ஷாலினி ஜோடிக்கு சினிமாவை தாண்டியும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சூர்யா – ஜோதிகா, விஜய் – சங்கீதா, பிரசன்னா – ஸ்னேகா, ஜெயம்ரவி – ஆர்த்தி ஆகிய திரையுலக ஜோடிகள் மக்களிடம் பாராட்டுக்களை பெற்ற மிகச்சிறந்த ஜோடிகளாகும். இந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்துள்ள நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் காத்து கிடக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்னாக தங்கள் காதலை உறுதிப்படுத்திய இருவரும், ஜோடியாக சேர்ந்து பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்கள். இருவரும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை நயன்தாரா அல்லது விக்னேஷ் சிவன் வலைதளத்தில் பதிவிட அந்த புகைப்படங்கள் ஏகப்பட்ட லைக்ஸ்களை அள்ளுவது வழக்கம்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் விழாவை நயன்தாரா சிறப்பாக கொண்டாடினார். அந்த விழாவில் ஏகப்பட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மீண்டுமாக வலைதளத்தில் பகிரப்பட்டு, அதிகபட்ச பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here