‘5ஜி சேவை கோபுரங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது’ – தொலைத்தொடர்பு துறை அறிக்கை!!

0

இந்தியாவில் 5ஜி சேவைக்காக அமைக்கப்படும் செல்போன் கோபுரங்களால் எந்த பாதிப்பும் மக்களுக்கு ஏற்படாது என்று தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

5 ஜி :

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை மிக அபார வளர்ச்சியை அடைந்து வருகிறது. மேலும் இதன் வளர்ச்சியால் தான் இந்தியாவில் பல துறைகள் இப்பொது மிக சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் அடுத்த கட்டமாக 5ஜி சேவை அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்காக புதிய செல்போன் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது. ஆனால் செல்போன் கோபுரங்கள் அமைக்கும் பொழுதெல்லாம் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த நிலையை மாற்ற தொலைத்தொடர்பு துறை ஓர் அறிக்கையை விட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் கூறியதாவது, தொலைத்தொடர்பு சேவைகள் நமது பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கடந்த கொரோனா காலத்தில் துறைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கியதற்கு தொலைத்தொடர்பு தான் முக்கிய காரணமாக இருந்தது. தற்போதைய காலங்களில் தொலைத்தொடர்பு சேவைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்லவேண்டும். எனவே இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அமைக்கப்படவுள்ளது. இதனால் பல புதிய கோபுரங்கள் அமைக்கும் நிலை ஏற்படும்.

இதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மக்களுக்கு தொலைத்தொடர்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தற்போது புதிதாக அமைக்கப்படும் கோபுரங்களால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு அறிவித்த படியே தொலைத்தொடர்பு கதிரியக்கம் செயல்படுத்தி வருகிறது என்றும் தவெறிவித்தனர். தொலைத்தொடர்பு குறித்த விரிவான விளக்கம் வேண்டும் என்றால் www.dot.gov.in என்ற இனையத்தில் சென்று பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here