தமிழக சட்டமன்ற தேர்தல் – திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!!

0

சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் துவங்கவுள்ளது. இந்நிலையில் சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள் பட்டியல்

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கட்சியினர் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐயூஎம்எல், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு குறித்து, திமுக கட்சியின் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற விவரங்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here