Thursday, May 2, 2024

புகழ் பெற்ற பூரி ஜகநாதர் தேர் திருவிழா – மக்களுக்கு வாழ்த்து கூறி பிரதமர் ட்வீட்..!

Must Read

ஒடிசா மாநிலத்தின் புகழ் பெற்ற பூரி ஜகந்நாதர் கோவில் தேர் திருவிழாவிற்கு அனுமதி வழங்க பட்டு உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அனைவர்க்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

புகழ் பெற்ற தேர் திருவிழா:

ஒடிசா மாநிலத்தில் உள்ளது பூரி கடற்கரை நகரத்தில் அமைந்த வைணவத் திருக்கோயில். இக்கோயில் ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரைக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் வகையில் அமைந்த இக்கோயிலின் மூலவர்களான ஜெகன்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரையின் திருமேனிகள் மரத்தால் செய்யப்பட்டவை.

puri jagannath temple rath yatra
puri jagannath temple rath yatra

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இம்மூலத் திருமேனிகள் உரிய சடங்குகளுடன், புதிய மரத்தால் செதுக்கி அமைக்கப்படும். உலகப் புகழ் வாய்ந்த பூரி ஜெகநாதர் கோயில் தேரோட்டத் திருவிழா ஆண்டு தோறும் 9 நாட்கள் நடைபெறும். தேரோட்டத் திருவிழாவில், இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நாடு முழுவதிலிருந்து கலந்து கொள்வார்கள்.

jagannath temple
jagannath temple

ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் தேர் திருவிழா நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று தன்னார்வல தொண்டு நிர்வாகம் வழக்கு தொடர்ந்து இருந்தது உச்சநீதி மன்றத்தில். உச்சநீதி மன்றமும் பரவலை கருத்தில் கொண்டு தேர் திருவிழா நடத்த தடை விதித்தது, இந்த மாதம் 18 ஆம் தேதி. ஆனால், இதனை எதிர்த்து தடையை ரத்து செய்யும் படி ஜகன்நாத் சான்ஸ்கிருதி ஜகரானா மன்ச் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

ஏர் இந்தியா விமானங்களுக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு – போக்குவரத்து அமைச்சகம் அறிக்கை..!

இதை பரிசலித்த உச்ச நீதி மன்றம் நிபந்தனைகளுடன் பூரி ஜெகநாதர் தேர் திருவிழாவிற்கு அனுமதி அளித்தது. நீதி மன்றம் கடைசி நேரமான நேற்று அனுமதி அளித்ததால், இன்று திட்டமிட்டபடி தேர் திருவிழா நடக்க உள்ளது. பூரி ஜெகன்நாதர் கோயிலில் இருந்து ரத யாத்திரைக்கு பூசாரிகள் மற்றும் ‘சேவயாத்’ கர்த்தர் ஜகன்நாதரின் சிலை தேருக்கு கொண்டு வரப்பட்டு ரச யாத்திரை தொடங்குவதற்காக பணி நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியின் ட்வீட்:

modi
modi

இந்நிலையில், பிரதமர் மோடி பூரி ஜெகநாதர் கோவில் தேர் திருவிழா ரத யாத்திரையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது ” இந்த புனிதமான நாளில் மக்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த தேர் திருவிழா மக்கள் வாழ்வில் ஆரோக்கியம், அதிர்ஷ்டம், செழிப்பு, மகிழ்ச்சி கிடைக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

உலக கோப்பை 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ!

இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக T20 உலக கோப்பை தொடர் வரும்  ஜூன் 2ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -