புரட்டாசி ஸ்பெஷல் – பெருமாள் நெய்வேத்தியம் ‘மிளகு வடை’ ரெசிபி!!

0

புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. இந்த நல்ல நாளில் பெருமாளை நினைத்து வழிபட்டு அவருக்கு படையல் வைத்து வணங்கினால் கேட்ட வரத்தை கொடுப்பார் என்பது ஐதீகம். இப்பொழுது பெருமாள் நெய்வேத்தியம் ‘மிளகு வடை’ எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெள்ளை உளுந்து – 250 கி

கருப்பு உளுந்து – 250 கி

மிளகு

உப்பு

பெருங்காயத்தூள்

சீரகம் – 1 தேக்கரண்டி

அரிசி மாவு – 2 தேக்கரண்டி

நெய்

செய்முறை

முதலில் வெள்ளை உளுந்து மற்றும் கருப்பு உளுந்தை நீரில் 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். அதன் பின் வெள்ளை உளுந்தை உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு கருப்பு உளுந்தை தனியாக உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது மிளகை பொடி செய்து அந்த மாவில் சேர்க்கவும். அதன் பிறகு சிறிது அரிசி மாவையும் இரண்டு மாவிலும் சேர்த்து பிசைய வேண்டும். வெள்ளை உளுந்து மாவை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். அதே போல கருப்பு உளுந்தை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது புரட்டாசி ஸ்பெஷல் மிளகு உளுந்த வடை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here