புனித் ராஜ்குமார் வீட்டில் மற்றொரு மரணம் – அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

0
புனித் ராஜ்குமார் வீட்டில் மற்றொரு மரணம் - அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!!

மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த புனீத் ராஜ்குமாரின் மரணத்தையே இன்னும் ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாத நிலையில் தற்போது புனீத் ராஜ்குமாரின் மாமனாரான பக்மனே ரேவநாத்தும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பக்மனே ரேவநாத்:

கன்னட திரையுலகின் பவர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் கடந்த வருடம் செப்டம்பர் 29 ஆம் தேதி அன்று தீவிர மாரடைப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். யாருமே எதிர் பார்க்கா நேரத்தில் திடீரென மருத்துவமனையிலேயே புனீத் ராஜ்குமார் மரணமடைந்தார். இவரது இறப்பு திரையுலகம் முழுவதும் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

இவர் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படத்தினை அவரது பிறந்த நாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர். இவரது இறப்பில் இருந்தே மீண்டு வராத குடும்பத்தினர் மேலும் ஒரு இழப்பை சந்தித்துள்ளனர். அதாவது புனித் ராஜ்குமாரின் மாமனாரான பக்மனே ரேவநாத் மாரடைப்பின் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் வாபஸ் – பிரதமர் அதிரடி உத்தரவு!!

இவர் ஏற்கனவே 20 வருடங்களுக்கு முன்பே ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தற்போது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே தனது 78 ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். புனீத் ராஜ்குமார் போலவே பக்மனே ரேவநாத்தும் இறப்பிற்கு பின்பு தனது இரு கண்களையும் தானம் செய்துள்ளார். திரையுலகினர் பலரும் தற்போது அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here