தித்திக்கும் பூசணி அல்வா., பத்து நிமிஷம் போதும் செஞ்சு முடிக்க., ட்ரை பண்ணுங்க சுவை தாறுமாறா இருக்கும்!!

0
தித்திக்கும் பூசணி அல்வா., பத்து நிமிஷம் போதும் செஞ்சு முடிக்க., ட்ரை பண்ணுங்க சுவை தாறுமாறா இருக்கும்!!
தித்திக்கும் பூசணி அல்வா., பத்து நிமிஷம் போதும் செஞ்சு முடிக்க., ட்ரை பண்ணுங்க சுவை தாறுமாறா இருக்கும்!!

உடலுக்கு ஏகப்பட்ட சத்துக்களை கொடுக்கும் பூசணிக்காயை இதுவரை நாம் சாம்பாராக பொரியலாக செய்து சாப்பிட்டிருபோம். ஆனால் அதை அல்வாவாக செய்து வீட்டில் உள்ள சிறியவர்கள் மற்றும் பெரியவர்களை குஷிப்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • பூசணிக்காய் – 1/2 கிலோ
  • வெள்ளை சர்க்கரை – 300 கிராம்
  • நெய் – 50 ml
  • ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த அல்வா செய்வதற்கு 1/2 கிலோ பூசணிகாயை வாங்கி தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும். மேலும் இதை அரைத்து அதில் இருக்கும் தண்ணீரை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து 50 ml நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து கொள்ளவும்.

மேலும் அதை தனியாக ஒரு பவுலில் மாற்றி வைத்துக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் அரைத்து வைத்துள்ள பூசணியை அதில் போட்டு 5 நிமிடம் வதக்கி கொள்ளவும். மேலும் பூசணிக்காயில் இருந்து தனியாக பிரித்து வைத்திருக்கும் தண்ணீரை சூடாக்கி கடாயில் சேர்த்து கொள்ளவும்.

ஜெயிலர் படத்தில் மூன் வாக் ஆடிய “ரமேஷ்” பற்றி யாருக்குமே தெரியாத ரகசியம்.., வெளிவந்த உண்மை!!

இதோடு 300 கிராம் சர்க்கரையை அதில் போட்டு நன்றாக கிண்டி விடவும். மேலும் அல்வா பதத்திற்கு வரும் போது 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடியை அதில் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது நமக்கு சுவையான பூசணிக்காய் அல்வா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here