தமிழகத்தில் இணையவழி மருத்துவ ஆலோசனை…, சுகாதாரத்துறை அமைச்சர் செய்த புதிய வசதி!!

0
தமிழகத்தில் இணையவழி மருத்துவ ஆலோசனை..., சுகாதாரத்துறை அமைச்சர் செய்த புதிய வசதி!!
தமிழகத்தில் இணையவழி மருத்துவ ஆலோசனை..., சுகாதாரத்துறை அமைச்சர் செய்த புதிய வசதி!!

பொதுமக்கள் கொரோனா கால கட்டத்தில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இத்தகைய இக்கட்டான நிலையில், பொது மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ ஆலோசனைகளை மருத்துவ நிபுணர்கள் பலரது உதவியின் மூலம் இணையதளத்தின் வாயிலாக பெற்று வந்தனர். இந்த திட்டம் சிறப்பாக இருக்க செய்லபடவே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொலை மருத்துவம் எனப்படும் இந்த இணையவழி மருத்துவ ஆலோசனை சேவையை மக்களுக்காக தொடங்கி வைத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், https://teleconsultation.s10safecare.com/ என்ற தளத்தில், தங்கள் ஆலோசனை பெற்றுக் கொள்ள விரும்பும் நேரம் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்த பின் செல்போனுக்கு பாஸ்வேர்ட் வரும். இதனை பதிவு செய்து சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி இந்த பயன்பாட்டை பெற்று கொள்ளலாம்.

ஸ்டெர்லைட் ஆலையை போல் NLC நிறுவனத்திற்கும் சீல்? பாமக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!!

ஆலோசனை பெரும் நேரம் மற்றும் கிழமை:

  • பொது மருத்துவ துறை – திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (காலை 9 மணி to 10 மணி)
  • பொது அறுவை சிகிச்சை – திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை (காலை 10 மணி to 11 மணி வரை)
  • குழந்தை நல மருத்துவம் – செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (காலை 10 மணி to 11 மணி)
  • முதியோர் நோய் மருத்துவம் – புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை (காலை 10 மணி to 11 மணி வரை)
  • மகப்பேறு மருத்துவம் – செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை (காலை 11 மணி to 12 மணி),
  • தோல் நோய் மருத்துவம் – திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை (காலை 11 மணி to 12 மணி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here