நல்லவருன்னு நம்பி ஏமாந்துட்டேன்., பணத்தை வாங்கிட்டு என்னை மோசம் பண்ணிட்டாரு., ரவீந்தர் மீது மீண்டும் புகார்!!

0

கோலிவுட் சினிமாவில் திரைப்பட தயாரிப்பாளராக வலம் வருகிறார் ரவீந்தர் சந்திரசேகர். இவர் முருங்கைக்காய் சிப்ஸ், நட்புனா என்னானு தெரியுமா, சுட்ட கதை போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இதுபோக சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து சோசியல் மீடியாவில் படு பிரபலமடைந்தார். இப்படி இருக்கையில் இவர் அமெரிக்காவில் வாழும் விஜய் என்ற இந்தியரிடம் ”கிளப் ஹவுஸ்” என்ற செயலியில் பழகி அவரிடம் 15 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆனால் அதை திருப்பி கேட்டதற்கு அவருடைய நம்பரை ரவீந்தர் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆன்லைன் மூலம் சென்னை காவல் நிலையத்திற்கு விஜய் புகார் கொடுத்திருந்தார். அதன் பின் பேச்சு வார்த்தை நடத்தி பணத்தை திரும்ப தருவதாக போலீசில் ரவீந்தர் கூறியிருந்தார். இதையடுத்து அந்த நபருக்கு ரவீந்தர் அனுப்பிய காசோலை 2 முறை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதனால் மன வருத்தத்தில் உறைந்த விஜய் மருத்துவமனையில் தான் அனுமதிக்க பட்டிருப்பதாகவும், நல்லவர் என ரவீந்தரை நம்பி தான் ஏமாந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

கைதி 2வை கை விட்ட லோகேஷ் கனகராஜ்.., புது டிவிஸ்ட் வைத்த ரோலக்ஸ் – டில்லி.., என்னனு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here