புரோ கபடி லீக் 2024: முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்…, தமிழ் தலைவாஸ் இடம் எங்கே??

0
புரோ கபடி லீக் 2024: முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்…, தமிழ் தலைவாஸ் இடம் எங்கே??
புரோ கபடி லீக் 2024: முதலிடம் பிடித்த ஜெய்ப்பூர்…, தமிழ் தலைவாஸ் இடம் எங்கே??

இந்திய ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற புரோ கபடி லீக், தொடர் கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், பங்கு பெற்றுள்ள 12 அணிகளும் கிட்டத்தட்ட 16 முதல் 17 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. இதன் அடிப்படையில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 17 போட்டிகளில் விளையாடி 12ல் வெற்றி, 2ல் தோல்வி மற்றும் 3ல் டிரா செய்து 71 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து, புனேரி பல்டன் 16 போட்டிகளில் 12 ல் வெற்றி, 2ல் தோல்வி மற்றும் 2ல் டிரா செய்து மொத்தமாக 68 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 2 வது இடத்தை பிடித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்கு அடுத்ததாக, தபாங் டெல்லி 59, பாட்னா பைரேட்ஸ் 53, ஹரியானா ஸ்டீலர்ஸ் 50 புள்ளிகளுடன் 3, 4 மற்றும் 5 வது இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில், தமிழ் தலைவாஸ் அணி முதல் சில போட்டிகளில் தோல்வியை சந்தித்தாலும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று தனது புள்ளி கணக்கை தொடங்கியது. இதன் மூலம், தமிழ் தலைவாஸ் அணி 17 போட்டிகளில் 7ல் வெற்றி, 10ல் தோல்வி அடைந்து 40 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளது. இனி அடுத்து வரும் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC “குரூப் 1” தேர்வு அப்டேட்., தேர்ச்சி பெற இது கட்டாயம்? உடனே முந்துங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here