புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸுக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் பலப்பரீட்சை…,எகிறும் எதிர்பார்ப்பு?

0
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸுக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் பலப்பரீட்சை...,எகிறும் எதிர்பார்ப்பு?
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸுக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் பலப்பரீட்சை...,எகிறும் எதிர்பார்ப்பு?

புரோ கபடி லீக் தொடரில், பெங்களூரு புல்ஸ் அணி தங்களது சிறப்பான ஆட்டத்தால் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி முதலிடத்தை எட்டியது. இந்த லீக்கில் இன்று தமிழ் தலைவாஸுக்கு எதிராக பாட்னா பைரேட்ஸ் பலப்பரீட்சை செய்யவுள்ளது.

புரோ கபடி லீக்:

புரோ கபடி லீக் தொடரின் 9 வது சீசன் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸை எதிர்த்து யு மும்பா அணி போட்டியிட்டது. இதில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸின் அர்ஜுன் தேஷ்வால் சிறப்பாக விளையாடி 13 புள்ளிகளை அணிக்கு பெற்று தந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும், ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 32-22 என்ற புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 48 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. இது போன்ற மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு புல்ஸ் விளையாடியது.

இனியாவால் வீட்டில் வெடித்த பூகம்பம்.,, கோபி நினைச்சது நடந்துருச்சு.,,பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் எபிசோட்!!

இந்த போட்டியில், பெங்களூரு புல்ஸ் 49-38 என்ற புள்ளி வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம், பெங்களூரு புல்ஸ் அணி 12 அணிகள் கொண்ட புள்ளி பட்டியலில், 51 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்த லீக் தொடரில் இன்று தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிராகவும், தபாங் டெல்லி அணி UP யோதாஸ் எதிராகவும் மோத உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here