இனியாவால் வீட்டில் வெடித்த பூகம்பம்.,, கோபி நினைச்சது நடந்துருச்சு.,,பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் எபிசோட்!!

0
இனியாவால் வீட்டில் வெடித்த பூகம்பம்.,, கோபி நினைச்சது நடந்துருச்சு.,,பாக்கியலட்சுமி லேட்டஸ்ட் எபிசோட்!!

பாக்கியலட்சுமி சீரியலில், இனியா ஸ்கூலுக்கு கோபியை வர சொன்ன விஷயம் பாக்யாவுக்கு தெரிய வர, இன்று வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்துள்ளது.

இன்றைய எபிசோட்:

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி இனியாவிற்காக ஸ்கூலுக்கு வந்து போன விஷயத்தை HM மூலம் அறிந்த பாக்கியா, அப்படியே ஷாக்கில் உறைந்து ஸ்கூல் வாசலிலேயே நிற்கிறார். இதையடுத்து கிளாஸ் முடிந்து இனியா வர, பாக்கியா உங்க அப்பாவ வர சொன்னியா? ஏன் என்கிட்ட நடந்த விஷயத்தை சொல்லவில்லை என்று கேட்க, அம்மாவுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்று இனியா அதிர்ச்சி ஆகிவிட்டார். இதையடுத்து இருவரும் வீட்டுக்கு செல்ல, எழில், செழியன், ஈஸ்வரி, ராமமூர்த்தி அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பாக்கியா, நடந்த விஷயம் முழுவதையும் அவர்களிடம் சொல்லிவிடுகிறார். இதை கேட்டு அனைவரும் இனியா மீது கோபப்படுகின்றனர். அதற்கு அவர், நீங்க இப்படி கோவப்படுவீங்கனு பயந்துதான் நான் சொல்லல, அப்பா ஸ்கூலுக்கு வந்தாரு என்ன திட்டவே இல்லை, மேடம் கிட்ட பொறுமையா பேசிட்டு போனாரு? என்று சொல்கிறார் இனியா. இதை கேட்ட ராமமூர்த்தி அவன் உனக்கு நல்ல அப்பாவே இல்லை, அவனை போய் வர சொல்லிருக்க? என்று சத்தம் போடுகிறார்.

இதையடுத்து பாக்கியா, இனியா மீது கோபப்பட்டு அறைந்து விட்டார். இதையடுத்து எழில் பாக்கியவை தடுக்கிறார். இப்படி நீங்க என்கிட்ட கோபமாக நடந்துபீங்கான்னுதான் நான் சொல்லல என்று இனியா எதிர்த்து பேசுகிறார். மேலும் கோபம் பொறுக்காமல் ஈஸ்வரியும் இனியாவை அடிக்க செல்ல, நீங்களும் என்னை அடிக்க வரீங்களா? அப்பா வீட்டை விட்டு போனதும் எல்லாரும் என்ன அடிக்கறீங்க என அழுகிறார். அப்போ உன் அப்பா தான் உனக்கு முக்கியம்னா அவன் கூடவே போய் இருக்க வேண்டியதுதானே என ஈஸ்வரி கத்துகிறார்.

அதற்கு இனியா அழுதுகொண்டே நான் வீட்டை விட்டு எங்கேயாவது போறேன்? என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல, வீட்டில் சண்டை நடக்கும் சத்தம் கேட்டு கோபி வருகிறார். அப்போது இனியா வீட்டு வாசலுக்கு வந்து, அப்பா எல்லாரும் என்னை அடிக்கிறாங்க என்று சொல்ல, நான் வந்து என்னன்னு கேட்கிறேன் என்று கோபி கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here