மேடையில் நடனமாடி மிரள வைத்த பிரியங்கா… அசந்து போன ரோபோ சங்கர்!!!

0

திரையில் தற்போது ஒரு நகைச்சுவை நடிகராக கலக்கி வருபவர் ரோபோ சங்கர். அவரின் மனைவி பிரியங்கா ரோபோ சங்கர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் ஒரு நிகழ்ச்சி மேடையில் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார்.

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் ரோபோ சங்கர். இவர் அந்த நிகழ்ச்சியிலும் தன்னுடைய ஸ்டாண்டப் காமெடியால் அனைவரையும்  சிரிக்க வைத்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். இருப்பினும் அந்த அளவிற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் தன்னுடைய விடா முயற்சியாலும்  தன்னுடைய திறமையாலும்  சாதித்தவர்.

மேலும் இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.மேலும் இவர் மனைவியும் ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். இருப்பினும் இவர் பங்கேற்ற  குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சிக்கு பிறகு தான் மிக பிரபலமானார்.

அதே சமயம் அவரின் மகள் இந்திரஜா சங்கர், விஜய் அவர்களின் பிகில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவ்வாறு குடும்பமே தங்களை திரைத்துறையில் முன்னிலை படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது பிரியங்கா ரோபோ சங்கர் அவர்கள், ஒரு நிகழ்ச்சி மேடையில் தன்னுடைய கணவர் அருகில் இருக்க ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by FilmiFriday ™ (@filmifriday)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here