ஆந்திரா ஸ்டைலில் காரசாரமான ‘சிக்கன் கொத்சு’ ரெசிபி – மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க!!

0

சிக்கன் எவ்வளவு தான் கெடுதல் என்று சொன்னாலும் கூட பல நன்மைகள் அதில் இருக்க தான் செய்கிறது. மேலும் புரத சத்துக்களும் இதில் அதிகமாக உள்ளது. இப்பொழுது இந்த சிக்கனை வைத்து ஆந்திரா ஸ்டைலில் கொத்சு எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

மல்லித்தூள் – 1 தேக்கரண்டி

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி

தக்காளி – 2

வெங்காயம் – 1

பட்டை. கிராம்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் தக்காளி வெங்காயத்தை சிறிதாக நறுக்கி எடுத்து கொள்ளவும். இப்பொழுது கழுவி வைத்த சிக்கனில் சிறிது வெங்காயம் தக்காளியை அதில் போட்டு நன்கு பிசைந்து விட வேண்டும். மேலும் கொடுக்கப்பட்ட மசாலாவையும் அதில் சேர்த்து கலந்து 1 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

அப்பொழுது தான் சிக்கனில் மசாலா நன்கு உள்ளே இறங்கும். அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு அதில் இந்த சிக்கனை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் கொத்சு தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here