அரவிந்த் சாமியின் இரண்டாவது மனைவி இவங்க தானா?? அதுவும் இவ்வளவு பெரிய ஆளா!!!

0

சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அரவிந்த்சாமி. இவர் 2012 ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை இரண்டவதாக திருமணம் செய்து கொண்டு உள்ளார். தற்போது இவரின் புகைப்படமும் அவரை பற்றிய சுவாரசிய தகவல்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகரான ரஜினி அவர்களும், அதே போல மலையாள திரையுலகில் தன் நிகர் இல்லாத நடிகராக இருக்கும் மம்முட்டியும் இணைந்து நடித்து வெளியான படம் தளபதி, இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி.

அதன் பிறகு அவர் நடித்த ரோஜா, பம்பாய், இந்திரா உள்ளிட்ட படங்கள் ஹிட்டானதை அடுத்து  90s காலகட்டத்தில் ஒரு முக்கிய நடிகராக வலம் வந்தார். அதை தொடர்ந்து பல மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தற்போது ஒரு சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தன்னுடைய வில்லத்தனத்தால் மிரட்டி வருகிறார்.

மேடையில் நடனமாடி மிரள வைத்த பிரியங்கா… அசந்து போன ரோபோ சங்கர்!!!

அவர் வில்லனாக நடித்து வெளியான தனி ஒருவன், போகன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இருப்பினும்  இவர் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை, அரவிந்த் சாமி அவர்கள் காயத்திரி ராமமூர்த்தி என்பவரை 1994ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 2010ஆம் ஆண்டு பிரிந்தனர்.

இதையடுத்து இவர் 2012 ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரின் இரண்டாவது மனைவி அபர்ணா முகர்ஜி ஒரு பிரபல வக்கீல் ஆவார். தற்போது இவர் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here