கிராமத்து ஸ்டைலில் செய்த காரசாரமான இறால் தொக்கு – ட்ரை பண்ணி பாருங்க.., மிச்சமே இருக்காது!!

0
Prawn Thokku

கடல் உணவுகள் என்றாலே அது அதிக சத்துக்களை பெற்றிருக்க கூடிய ஒன்று. அதில் இறால் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நம் உடலுக்கு வலு சேர்க்க கூடிய அனைத்து சத்துக்களும் அதில் அடங்கி இருக்கும். இப்பொழுது இறாலை வைத்து தொக்கு எப்படி செய்யலாம் என்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்

இரால் – 1 கி

இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் இறாலை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில்நறுக்கி வாய்த்த வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பின் சிறிது உப்பு சேர்த்து நன்கு சுருளும்படி வதக்கவும். இப்பொழுது நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், போன்றவற்றை சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் இறாலை சேர்த்து மசாலாவில் ஓட்டும் படியாக கிளறி விடவும். இப்பொழுது இதனை 5 நிமிடங்கள் மூடி வைத்து விட்டு கொத்தமல்லி தூவி இறங்கினால் சுவையான இறால் தொக்கு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here