சுவையை அள்ளி இறால் தொக்கு., இந்த மாதிரி சமைத்து பாருங்கள்., மிச்சமே இருக்காது!!

0
சுவையை அள்ளி இறால் தொக்கு., இந்த மாதிரி சமைத்து பாருங்கள்., மிச்சமே இருக்காது!!
சுவையை அள்ளி இறால் தொக்கு., இந்த மாதிரி சமைத்து பாருங்கள்., மிச்சமே இருக்காது!!

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு சிக்கன், மட்டன் மட்டுமல்லாமல் கடல் உணவான மீன், நண்டு, இறால் போன்றவற்றை உணவுகளை சாப்பிடுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் பலரின் பேவரைட் ஒன்றாக இருக்கும் இறாலை ஒரு வித்தியாசமான சுவையில் சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேவையான பொருட்கள்;

  • இறால் – 250 கிராம்
  • மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2
  • வெங்காய பேஸ்ட் – 4 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை விளக்கம்;

இந்த இறால் தொக்கு ரெசிபி தயாரிப்பதற்கு நாம் வாங்கி வைத்துள்ள இறாலை கழுவி சுத்தமாக செய்து கொள்ளவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் 3 டீஸ்பூன் வெங்காய பேஸ்ட்டை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

இப்போது 2 பச்சை மிளகாயை கீறி இதில் போட்டுக் கொள்ளவும். இதோடு மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட்டுக் கொள்ளவும். இப்போது நாம் கழுவி வைத்துள்ள இறாலை இதில் சேர்த்து கிளறிவிட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு கடாயை மூடி விடவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்குப் பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை இந்த இறால் தொக்கில் போட்டு அடுப்பை ஆப் செய்து கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here