
பொதுவாக சப்பாத்தி, பூரி என்றாலே அதற்கு தொட்டு சாப்பிட நாம் சமைப்பது குருமா தான். அந்த குருமா ரெசிபியை ஒரே மாதிரி செஞ்சு கொடுத்தால் குழந்தைகள் சலிப்படைந்து விடுவார்கள். அதனால் இன்று வித்தியாசமாக, தரமான சுவையில் பச்சை பட்டாணியை வைத்து ஒரு சூப்பர் ரெசிபி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு – 3
- பட்டாணி – ஒரு கப்
- கசகசா – 1 டீஸ்பூன்
- சோம்பு – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- எண்ணெய் – 3 டீஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- தேங்காய் – 50 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- பட்டை கிராம்பு ஏலக்காய் – சிறிதளவு
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
செய்முறை விளக்கம்
இந்த பால் கறி பட்டாணி குருமா தயாரிப்பதற்கு ஒரு மீடியம் சைஸ் மூன்று உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து கொள்ளவும். அதன் பிறகு மிக்ஸி ஜாரில் 50 கிராம் தேங்காய், 1 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சோம்பு, 1 டீஸ்பூன் கசகசா சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும். மேலும் அதில் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இதோடு 2 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதோடு தக்காளி, 1 கப் பட்டாணி சேர்த்து 10 நிமிடத்திற்கு வதக்கி கொள்ளவும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலா & உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து கடாயை மூடி போட்டு மூடவும். ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு குருமா கொதித்து வரும் போது சிறிதளவு கொத்தமல்லி தலையை கிள்ளி போட்டு அடுப்பை ஆப் செய்யவும்.இப்போது நமக்கு சுவையான பால் கறி பட்டாணி குருமா ரெடி. இதை சுட சுட சப்பாத்தி, பூரிக்கு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
விஜய் டிவியின் சர்ச்சை நாயகனுக்கு நடந்து முடிந்த திருமணம்., வாழ்த்துக்களை குவிக்கும் திரையுலகம்!!