தளபதி ஃபேன்ஸ் ஹாப்பி அண்ணாச்சி… பீஸ்ட் பட டான்ஸ் ரிகர்சல் போட்டோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே…

0
தளபதி விஜயின் பீஸ்ட் பட கதாநாயகியான பூஜா ஹெக்டே, அப்படத்திற்காக டான்ஸ் ரிகர்சல் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் அந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தான் பீஸ்ட். சமீபத்தில் இந்த படத்துக்கான பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக்கை வெளியிட்டது படக்குழு. இப்படத்தில் கதாநாயகியாக புட்டபொம்மா புகழ் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் பாடல் காட்சிகளை படமாக்க சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் தற்போது முடிந்துள்ளன.

கிட்டத்தட்ட 6 நாட்கள் பாடல் காட்சி ஒன்றை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பாடல் ஷூட்டிங் வரும் ஜூலை 1 முதல் சென்னையில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்காக கதாநாயகி பூஜா ஹெக்டே ரிஹர்சல் செய்து வருகிறார். அதை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இது படுவேகமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here