‘பொன்னியின் செல்வன் 2’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்….., படக்குழு அறிவிப்பு…,

0
'பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்....., படக்குழு அறிவிப்பு...,
'பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்....., படக்குழு அறிவிப்பு...,

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்

நடிகர் ஜெயம்ரவி, விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், விக்ரம் பிரபு, நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதலாம் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி எக்கச்சக்க வரவேற்புகளை பெற்றது. இதை தொடர்ந்து இந்த படத்தின் 2 ஆம் பாகம் அடுத்த மாதம் 28 ஆம் தேதியன்று வெளியாக இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

CSK பயிற்சி ஆட்டத்தில் தல ‘தோனி’….,கொண்டாடிய ரசிகர்கள்….,

இதற்கிடையில், ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை கோர்ப்பு வேலைகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இசை வெளியீட்டு விழா இம்மாதம் 29 ஆம் தேதியன்று நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here