CSK பயிற்சி ஆட்டத்தில் தல ‘தோனி’….,கொண்டாடிய ரசிகர்கள்….,

0
CSK பயிற்சி ஆட்டத்தில் தல 'தோனி'....,கொண்டாடிய ரசிகர்கள்....,
CSK பயிற்சி ஆட்டத்தில் தல 'தோனி'....,கொண்டாடிய ரசிகர்கள்....,

IPL போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் தல தோனி ஈடுபட்டு வரும் காட்சியை ரசிகர்கள் கண்டு களித்து வருகின்றனர்.

தல தோனி பயிற்சி

நடப்பு ஆண்டிற்கான IPL போட்டிகள் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்க இருக்கிறது. இந்த போட்டிக்காக அனைத்து அணிகளும் தங்களை தயார் செய்து வருகின்றன. அந்த வகையில், மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியினர் கடந்த ஒரு சில வாரங்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் CSK அணியின் பயிற்சி ஆட்டத்தில் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சிதம்பரம் மைதானம் முழுவதும் தற்போது CSK ரசிகர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஒரே பார்வையில் திணறடிக்கும் ஷெரின்.., அழகை பார்த்து பிரமித்த இளவட்டங்கள்!!

இந்த பயிற்சி ஆட்டத்தில் தல தோனி கலந்து கொள்வதற்காக மைதானத்தில் நுழையும் போது ரசிகர்கள் அனைவரும் கத்தி, கூச்சலிட்டு உற்சாகமடைந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில், தோனி, ஜடேஜா, ஸ்டோக்ஸ், தீபக் சஹார் உள்ளிட்ட CSK வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here