UP யோதாசுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி…, புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

0
UP யோதாசுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி..., புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!
UP யோதாசுக்கு எதிராக தமிழ் தலைவாஸ் திரில் வெற்றி..., புள்ளி பட்டியலில் முன்னேறி அசத்தல்!!

இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி லீக் தொடரில், நேற்று (பிப்ரவரி 6) தமிழ் தலைவாஸ் அணி UP யோதாஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் ஆட்டம் ஆனது விறுவிறுப்பாக அரங்கேறியது. இதில், வெற்றிக்காக கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, UP யோதாஸ் 25 புள்ளிகள் எடுக்க, தமிழ் தலைவாஸ் 32 புள்ளிகளை எடுத்து வெற்றியை உறுதி செய்தது. இதில், தமிழ் தலைவாஸின் நரேந்தர் 10 புள்ளிகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், தமிழ் தலைவாஸ் 19 போட்டிகளில் 8 ல் வெற்றி, 11 ல் தோல்வி அடைந்து 45 புள்ளிகளுடன் 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்று (பிப்ரவரி 7) நடைபெறும் முக்கிய போட்டியில் புனேரி பல்டன் மற்றும் பெங்களூர் புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவில் 2,200 கடன் செயலிகளுக்கு (Apps) தடை விதிப்பு., மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here