இந்தியாவில் 2,200 கடன் செயலிகளுக்கு (Apps) தடை விதிப்பு., மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!!!

0
இந்தியாவில் 2,200 கடன் செயலிகளுக்கு (Apps) தடை விதிப்பு., மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!!!
இந்தியாவில் 2,200 கடன் செயலிகளுக்கு (Apps) தடை விதிப்பு., மத்திய நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!!!

இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக செயலிகள் (Apps) மூலம் அதிக வட்டியில் கடன்களை வழங்கி பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற செயலிகள் பெரும்பாலும் சீன நாட்டை சேர்ந்தவைகளாக உள்ளதாகவும், அதன் மூலம் தற்கொலை சம்பங்களும் அரங்கேறி வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதையடுத்து 2022 செப்டம்பர் முதல் 2023 ஆகஸ்ட் மாதம் வரையிலும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2,200 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் பகவத் கே.கராட் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த காரணத்தினாலேயே, சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்.., கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலை.., கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here