
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பாயாசம் செய்வதற்கு ஜவ்வரிசி முக்கிய பொருளாக பயன்படுகிறது. மேலும் இந்த ஜவ்வரிசியில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய சத்துக்களும் உள்ளது. இப்படி இருக்கையில் இந்த ஜவ்வரிசியை பயன்படுத்தி நம் முகத்தின் அழகை அதிகரிக்க ஒரு சூப்பரான பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தேவையான பொருட்கள்;
- ஜவ்வரிசி – 3 டீஸ்பூன்
- பால் – சிறிதளவு
செய்முறையை விளக்கம்;
இந்த பேஸ் பேக் தயாரிப்பதற்கு ஒரு பவுலில் 3 டீஸ்பூன் ஜவ்வரிசியை போட்டு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். இதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்த ஜவ்வரிசியை அதில் போட்டு கொள்ளவும். மேலும் அதோடு சிறிதளவு பால் சேர்த்து நன்றாக பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும்.
சென்னை வாசிகளே.., இனி செல்லப்பிராணிகளுக்கு இந்த வசதியும் உண்டு.., வெளியான சூப்பர் நியூஸ்!!!
இப்போது இந்த பேக்கை நாம முகத்தில் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விடவும். இந்த பேக்கை தொடர்ந்து பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க உதவியாக இருக்கும்.