கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கோங்க – பிரதமர் திடுக்கிடும் அறிக்கை!

0

பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் அவர்கள் நாட்டில் பரவும் கொரோனா வைரஸுடன் மக்கள் வாழ பழகி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது அந்நாட்டு மக்களை சற்று அதிரவைத்துள்ளது.

கொரோனா வைரஸ்:

பிரிட்டன் மாகாணத்தில் கொரோனா வைரஸானது உருமாறி டெல்டா வகை வைரஸாக பரவி மக்களை கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் பிரிட்டன் மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. மேலும் நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரிட்டன் அரசு முகக்கவசம் அணிவது தனி நபர் விருப்பம் என்று அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு மருத்துவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் பிரிட்டன் மாகாணத்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 24 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் அதிர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எஸ்பிஐ ஏடிஎமில் கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 வங்கி கணக்குகள் முடக்கம் – சென்னை காவல்துறை அதிரடி!

அதன்படி அவர் கூறியதாவது, மக்களுக்கு முழு சுதந்திரம் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் ஓயவில்லை. எனவே மக்கள் கொரோனா வைரஸுடன் வாழ பழகி கொள்ள வேண்டும். மேலும் வரும் வாரங்களில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும். ஆகையால் மக்கள் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here