எஸ்பிஐ ஏடிஎமில் கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 வங்கி கணக்குகள் முடக்கம் – சென்னை காவல்துறை அதிரடி!

0

சென்னையில் கடந்த மாதம் எஸ்பிஐ வங்கி ஏடிஎமில் இருந்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் நடந்தது அனைவரையும் அதிரவைத்தது. தற்போது கொள்ளை கூட்டத்தை போலீசார் கைது செய்து கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 வங்கி கணக்குகளை சென்னை காவல்துறை முடக்கியுள்ளது.

எஸ்பிஐ:

சென்னையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிக்குள் அடுத்தடுத்து எஸ்பிஐ வங்கி ஏடிஎமில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதனால் மக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதனை அடுத்து இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொள்ளை வழக்கு தொடர்பாக வட மாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

இந்த 4 பேரில் கொள்ளை கூட்டம் தலைவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இதனால் இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்தது. அதற்கான மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 23 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் சுமார் ரூ.1 கோடி வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உலகையே ஒரே குடும்பமாக்கியது இந்திய நாகரிகம் – பிரதமர் மோடி பெருமிதம்!!

மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஏடிஎம் கார்டு மற்றும் அதற்கான சுமார் 30 வங்கி கணக்கை எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்து அதனை முடக்கினர். தமிழகத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்பு இதே கூட்டம் பல மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மற்ற மாநில போலீசார் கேட்டுக்கொண்டால் சென்னை போலீஸ் உதவி புரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலே வட மாநில கொள்ளை கும்பலை முதன் முறையாக சென்னை காவல்துறை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here