“ரஞ்சிதமே ரஞ்சிதமே”.., “ஜில்லா ஜில்லா” சாங்கை பின்னுக்கு தள்ளிய சிம்பு பட பாடல்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

0
"ரஞ்சிதமே ரஞ்சிதமே".., "ஜில்லா ஜில்லா" சாங்கை பின்னுக்கு தள்ளிய சிம்பு பட பாடல்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

நடிகர் சிம்பு நடித்த பத்து தல படத்தின் முதல் பாடலான நம்ம சத்தம் சாங் வெளியான நிலையில், வியூஸ் விவரம் குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

பத்து தல:

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேல் கோலிவுட்டில் பணியாற்றி, தற்போது வரை லிட்டில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் பத்து தல திரைப்படம் உருவாகியுள்ளது. அதுபோக இப்படத்தில் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த திரைப்படம் கன்னட படத்தின் டப்பிங் என்றாலும், சிம்புவின் கெட்டப்புக்காக ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. நடிகர் சிம்பு பக்கா கேங்ஸ்டராக நடித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது.

பாக்கியலட்சுமி இனியாவின் சொந்த அப்பா இவரா? முக்கிய விழாவில் அவரே வெளியிட்ட முதல் பதிவு!!

இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு நம்ம சத்தம் என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த நிலையில் நம்ம சத்தம் பாடலை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த பாடல் தற்போது ஐந்து மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. அதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here