காலத்தால் அழியாத காதல் ஓவியமான “டைட்டானிக்” ரீ ரிலீஸ்.., சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்!!

0
காலத்தால் அழியாத காதல் ஓவியமான
காலத்தால் அழியாத காதல் ஓவியமான "டைட்டானிக்" ரீ ரிலீஸ்.., சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போன ரசிகர்கள்!!

காதலர் தினத்தை முன்னிட்டு ஹாலிவுட் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய டைட்டானிக் திரைப்படம் மீண்டும் ரீரிலீஸ் ஆக போவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

டைட்டானிக் :

தற்போதைய காலகட்டத்தில் எத்தனையோ லவ் படங்கள் வந்தாலும், காலத்தால் அழியாத திரைப்படம் என்றால் அது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியாகி உலகெங்கிலும் மாபெரும் வெற்றியை தொட்ட ‘டைட்டானிக்’ தான். இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் கேத் வின்ஸ்லெட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமின்றி இந்த திரைப்படம் பல விருதுகளை வாரி குவித்தது. அதன்படி சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை என 11 ஆஸ்கார் விருதுகளை தட்டி சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இப்படம் 2012ம் ஆண்டு 2டி மற்றும் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இப்படத்தில் காட்சிகள் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் நிகழ்வது போலவே இருந்ததை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

“ரஞ்சிதமே ரஞ்சிதமே”.., “ஜில்லா ஜில்லா” சாங்கை பின்னுக்கு தள்ளிய சிம்பு பட பாடல்.., படக்குழுவினர் அறிவிப்பு!!

இந்த நிலையில் மீண்டும் இந்த திரைப்படம் 25 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக மீண்டும் ரிலீசாக இருக்கிறது. அதாவது, டைட்டானிக் திரைப்படம் ‘ரீ மாஸ்டர்டு’ பதிப்பு ‘ 3D 4K HDR’ தொழில்நுட்பத்தில் 2023-ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு வார இறுதி நாளான பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here