“பத்திய பூண்டு, மிளகு குழம்பு” ரெசிபி – தாய்மார்களுக்கு ஏற்றது!!!

1

ஏதாவது வெளியூர் பயணத்துக்கு போயிட்டு வந்தாலோ அல்லது உடம்பு சரியா இல்லைன்னாலோ இந்த ஒரு குழம்பு மட்டும் வைச்சு சாப்பிட்டு பாருங்க. உங்க உடல்வலி பறந்து போயிரும். இந்த குழம்புக்கு பேரே மருந்து குழம்பு தாங்க. அது மட்டும் இல்லாமல் புதிதா குழந்தை பெற்று எடுத்த தாய்மார்களுக்கும் இந்த குழம்ப செஞ்சு குடுப்பாங்க. குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதிருக்கும்.

சிலருக்கு தாய்ப்பால் சுரப்பு கம்மியா இருக்கும். இதனால குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கிடைக்காது. மேலும், தாய்மார்கள் எதாவது வாயு சம்பந்தமான உணவு சாப்ட்டிருந்தாங்கன்னா அதுனால குழந்தைக்கு வயிற்றில் காற்று அடைச்சு எப்போதும் அழுதுகொண்டிருக்கும். இந்த “பத்திய பூண்டு, மிளகு குழம்பு” செஞ்சு கொடுத்தால் இந்த பிரச்சனை எதுவுமே வராது. இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த “பத்திய பூண்டு, மிளகு குழம்பு” எப்படி சமைக்கலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

பூண்டு – 100gm

மிளகு – 2 டேபிள் ஸ்பூன்

தனியா – 3 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6

சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

புளி – சிறிது அளவு

வெந்தயம் – 1 டீ ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது அளவு

கடுகு, உளுந்து – 1 டீ ஸ்பூன்

நல்லெண்ணெய் – 100 ml

கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் – 1 டீ ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்

செய்முறை:

குழம்பை மண்சட்டியில் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். முதலில் மண்சட்டியில் மிளகு, சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் இவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின்னர் இவற்றை ஆற விட வேண்டும். ஆறிய பின்பு நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பூண்டு முழுவதையும் போன் நிறம் ஆகும் வரை வதக்க வேண்டும். இப்பொழுது கடுகு,உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். இப்பொழுது கெட்டியாக கரைத்து வைத்திருக்கும் புளி, மற்றும் அரைத்து வைத்திருக்கும் மசாலா இவற்றை குழம்பில் சேர்க்க வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணிகளில் முறைகேடு!!

பிறகு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 10 நிமிடங்கள் கொதித்த பின்பு அடுப்பை அணைத்து விடலாம். இப்பொழுது வீடு முழுவதும் மணம் வீசும் “பத்திய பூண்டு, மிளகு குழம்பு” ரெடி!!!! சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடுங்க..சூப்பரா இருக்கும்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here