கேரளாவில் பரவும் அரிய வகை மலேரியா நோய் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

0

இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிபா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளன முதல் நபர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கிய முதல் நபர் திரிசூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது கேரளாவில் புது வித மலேரியா நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‛பிளாஸ்மோடியம் ஓவல்’:

தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தியாவில் கட்டுப்பாட்டுக்குள், கொரோனா வைரஸ் தாக்கம் இருந்துவருகிறது. ஆந்திராவில் ஏற்பட்ட மர்ம நோய் காரணமாக 200-க்கு மேற்பட்டோர் பாதித்துள்ளனர், ஒருவர் பலியான நிலையில் அந்த நோய் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றனர். அதை தொடர்ந்து தற்போது கேரளாவில் ‛பிளாஸ்மோடியம் ஓவல்’ எனும் புதிய வகை மலேரியா நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணிகளில் முறைகேடு!!

இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,”கேரளாவில், ‛பிளாஸ்மோடியம் ஓவல்’ என்ற புதிய வகை மலேரியா நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய், சூடான் சென்று திரும்பி வந்த ராணுவ வீரரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளிப்பதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால், இந்த நோய் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here