மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பணிகளில் முறைகேடு – அறநிலையத்துறை விசாரணை!!

0

மதுரையில் மிக பழமையான வழிபாடு தளமான மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழக அரசின் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது அதில் சேவகராக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பவரின் சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது .

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்:

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தமிழகத்தின் ஒரு மிக முக்கிய முத்திரையாக திகழ்கின்றது. இந்த கோயிலால் மதுரையும், மதுரைக்காரர்கள் மட்டுமில்லாமல் தமிழகத்தை தாண்டி இந்தியாவே பெருமைக் கொள்ளும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. தற்போது அந்த கோவில் தமிழக அரசின் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த கோவிலில் 200-க்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அங்கு பணிபுரிபவர்களின் சான்றிதழ்கள் போலியானது என தகவல் வெளியாகியது. இது குறித்து மேற்கொண்ட விசாரணையில் காமாட்சி என்ற ஊழியர் போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

போலி இணையதளங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை!!

தற்போது மேலும் அங்கு சேவகராக பணிபுரியும் சத்தியமூர்த்தி என்பவரும் போலி சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அவரையும் கடந்த வியாழக்கிழமை பணிநீக்கம் செய்தது கோவில் நிர்வாகம். தொடர்ந்து புகார் வரும் நிலையில் அனைவரின் சான்றிதழ்களும் உண்மையானதா என்பதை கண்டறிய சம்பந்தபட்ட பள்ளிகளில் ஆவணங்கள் கேட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here