தமிழகத்தில் நவ. 16ம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு – பெற்றோர்கள் எதிர்ப்பு!!

0
students
students

தமிழகத்தில் வரும் நவ.16 ஆம் தேதி பபள்ளிகள் திறப்பிற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில் பெரும்பாலான பெற்றோர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். ஆகையால் பள்ளி திறப்பை குறித்து நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்துக் கேட்பு கூட்டம்

நேற்று பள்ளி திறப்பிற்கான கருத்துக் கேட்பு கூட்டம் பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரிடம் நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் அரசு மற்றும் தனியார் என 12,500 பள்ளிகள் உள்ளன. அத்தனை பள்ளிகளிலும் கருத்துக் கேட்பு நடைபெற்றது. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மொத்தம் 50 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றன. கொரோனா காலத்தில் மாணவர்களின் படிப்பு பாதிப்பு அடையக் கூடாது என ஆன்லைன் வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு தமிழக அரசு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களை மட்டும் பள்ளிகளுக்கு நேரில் வந்து வந்து தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் ஏற்படுத்தி தந்தது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

parents consult
parents consult

பின்பு தமிழக அரசு வரும் நவ. 16 ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு வந்ததால் தமிழக அரசு பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டப் பின் பள்ளி திறப்பை பற்றி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தது. நேற்று நடந்த பெற்றோர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் ஒரு சில பெற்றோர்கள் மட்டுமே வந்தனர். வந்திருந்த பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பு

10,11,12 ஆம் ஆகிய வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், தமிழக அரசு அவர்களுக்கு மட்டுமே பள்ளிகளை காலை, மாலை என இரண்டு கட்டமாக திறக்கலாம் என்று தெரிவித்தது. ஆனால் நேற்று நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர் பள்ளி திறப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் மாணவர்கள் சரியான சமூக இடைவெளியை பிடிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

school students
school students

இதனால் மாணவர்களுக்கு கொரோனா அதிகமாக பரவி விடலாம் என்று அச்சப்படுகின்றனர். இந்த கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று மாலை முடிவடைந்தது. பெற்றோரின் கருத்து படிவங்களை மாவட்ட கல்வி அதிகாரி மூலம் இன்று முதன்மை கல்வி அலுவலருக்கு போய் சேரும். பின்பு பள்ளிக் கல்வி இயக்குநர், அரசுக்கு அறிக்கையை வெளியிட்ட பின் பள்ளி திறப்பு குறித்த முடிவை அரசு பின்னர் அறிவிக்கும் என்று உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here