தீபாவளி ஸ்பெஷல் “மட்டன் கோலா உருண்டை” ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

நாம இன்னைக்கி பாக்க போறது சூப்பரான மட்டன் கோலா உருண்டை. தீபாவளிக்கு எப்பவுமே ஸ்பெஷல் தான். மட்டன், சிக்கன் ஒரே மாதிரி செய்யாமா ஒரு புதுவிதமான டேஸ்ட்ல செஞ்சு வீட்ல இருக்குற எல்லாரையும் அசத்தலாம். மட்டன் ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது. எலும்புகள் வலுவடையும். அதிக கொழுப்புக்கள் இல்லை. சர்க்கரை நோய், பிரஷர் இருப்பவர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.

தேவையான பொருட்கள்:

மட்டன் கொத்துக்கறி – 1/4 கிலோ

சோம்பு – 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 6

தேங்காய் பால் – 1 தேக்கரண்டி

கடலை மாவு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

முதலில் மட்டனை சுத்தமாக கழுவி எலும்பு எதுவும் இல்லாமல் கொத்துக்கறியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு குக்கரில் போட்டு வேக வைக்கவும். கறி வெந்தவுடன் தண்ணீர் இருந்தால் நன்றாக பிழிந்துவிட்டு மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த மட்டனை சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு, தேங்காய் பால், உப்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலக்க வேண்டும். அதன்பின், கடலை மாவு சேர்த்து பிசைந்து உருண்டை உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் உருண்டைகள் உடையதாறு நன்றாக பிடித்து போட்டு பொறித்து எடுக்க வேண்டும். கடலை மாவின் நிறம் மாறி பொண்ணிறமாக வந்தவுடன் எடுத்தாலே போதும். ஏனென்றால், மட்டனை ஏற்கனவே வேகவைத்து அரைத்ததால் அதிகநேரம் பொறிக்க தேவை இல்லை. இப்போது சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here