என் கல்யாணத்துல நானே எதிர்பார்க்காம இது நடந்துச்சு., பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஓபன் டாக்!!

0
என் கல்யாணத்துல நானே எதிர்பார்க்காம இது நடந்துச்சு., பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஓபன் டாக்!!
என் கல்யாணத்துல நானே எதிர்பார்க்காம இது நடந்துச்சு., பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ஓபன் டாக்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், தனம் பாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தன் திருமணத்தின் போது நடந்த சுவாரசியமான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

சுஜிதா பதிவு:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர், தற்போது டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. தற்போது மொத்த, குடும்பமும் எதிர்பார்த்து காத்திருந்த முல்லையின் கர்ப்பம் குறித்த காட்சிகள், சீரியலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்தத் தொடரில் தனம் என்ற பாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் தன் திருமணம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது தான், பல மொழி தொடர்களில் நடித்திருந்தாலும், தமிழ் தொடரில் நடிக்கும் போது நான் அணிந்து கொள்ளும் தாலி எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது.

கஷ்டப்பட்டு நான் வளருவேன்.., கடைசில ஐஸ்வர்யாவை காரணம் காட்டுவீங்க.., கொதித்தெழும் தனுஷ்!!

இதைப் பற்றி என் குடும்பத்திடம் சொல்லி, எனக்கு தமிழ் தாலி வேண்டும் என்று கேட்டேன். பிறப்பிலே நான் ஒரு மலையாளி என்றாலும் என் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழின் கொங்கு நாட்டு தாலி என் திருமணத்தில் எனக்கு கிடைத்தது. அந்த சுவாரசியத்தை என்னால் மறக்கவே முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here