விஜய்யின் குடும்ப செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? வாரிசு படம் முழு விமர்சனம் இதோ!!

0
விஜய்யின் குடும்ப செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? வாரிசு படம் முழு விமர்சனம் இதோ!!
விஜய்யின் குடும்ப செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? வாரிசு படம் முழு விமர்சனம் இதோ!!

விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படம் இன்று வெளியாகி, ரசிகர்களிடையே பாசிட்டிவ் கமெண்ட்களை பெற்று வருகிறது.

வாரிசு விமர்சனம்:

விஜய் நடிப்பில், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமே கலக்கி வந்த விஜய், முழுக்க முழுக்க ஃபேமிலி சென்டிமென்டை நம்பி இந்த படத்தில் களம் இறங்கியுள்ளார். மிகப்பெரிய பிசினஸ்மேனான சரத்குமாருக்கு மொத்தம் 3 பிள்ளைகள். ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் விஜய். முதல் 2 மகன்களும், அப்பா நிழலில் வாழும் நிலையில், விஜய் மட்டும் சொந்த காலில் நிற்பதற்காக வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தனியாக பிசினஸ் செய்து வரும் அவர், மீண்டும் தன் குடும்பத்துக்கு திரும்பி வரும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், அந்த நேரத்தில் சரத்குமாரின் பிசினஸ் எதிரிகளான பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பிசினஸை கெடுத்து குடும்பத்தை நிலைகுலைய வைக்கின்றனர். இதனால், சரத்குமாரும் படுத்த படுக்கையாகிறார். தன் குடும்பத்தையும், பிசினஸையும் மீட்டெடுக்க சரத்குமாரின் வாரிசாக விஜய் களமிறங்குகிறார்.

இதை எப்படி செய்து முடித்தார் என்பதை படத்தின் மீதி கதை. தெலுங்கு இயக்குனரால் விஜய்யை, சரியாக இயக்க முடியுமா? என்ற கேள்விக்கு தன் காட்சிகள் மூலம் வம்சி பதில் அளித்துள்ளார். முழுக்க முழுக்க, விஜய்யின் சென்டிமென்ட் நிறைந்த வசனங்கள், இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாற்றி உள்ளது. “வெறும் கல் மண் நிறைந்தது மட்டுமல்ல வீடு, அது பலரின் உணர்வுபூர்வங்களால் நிறைந்தது” என விஜய் பேசும் டயலாக் ரசிகர்களை உருக வைத்துள்ளது.

விஜய் தாண்டி சரத்குமார் இந்த படத்தில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர், தமன் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. “ரஞ்சிதமே” பாடலை தாண்டி ராஷ்மிகாவுக்கு படத்தில் அந்த அளவுக்கு சொல்லக்கூடிய நடிப்பு இல்லை. யோகி பாபு, ஒரு சில இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார்.

குடும்ப பாசம் என்றால் என்ன என்பதை தன் தந்தைக்கு புரிய வைத்து, வீட்டை விட்டு வெளியே போன தன் அண்ணன்களையும் கொண்டு வந்து குடும்பத்தைக் காத்து நிற்கும் ஒரு தூணாக விஜய் மாறியுள்ளார். மொத்தமாக 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் இந்த படம் முழுவதும் விஜய், தந்தையை காத்த தனிப்பெரும் ஹீரோவாக வலம் வருகிறார். ஆக மொத்தம் விஜய்யின் வாரிசு 5 க்கு 2.75 ரேட்டிங்கை பெற்று ரசிகர்களின், பொங்கலுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here