IND vs SL: ஒரே சதம்…, சச்சினின் 3 சாதனைக்கு சாவல் விட்டு அசத்திய விராட் கோலி! கொண்டாடும் ரசிகர்கள்!!

0
IND vs SL: ஒரே சதம்..., சச்சினின் 3 சாதனைக்கு சாவல் விட்டு அசத்திய விராட் கோலி! கொண்டாடும் ரசிகர்கள்!!
IND vs SL: ஒரே சதம்..., சச்சினின் 3 சாதனைக்கு சாவல் விட்டு அசத்திய விராட் கோலி! கொண்டாடும் ரசிகர்கள்!!

இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் விராட் கோலி, சதம் அடித்ததன் மூலம் சச்சினின் 3 சாதனை சமன் மற்றும் முறியடித்து அசத்தியுள்ளார்.

விராட் கோலி:

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 373 ரன்களை இலங்கை அணிக்கு இலக்காக நிர்ணயித்து இருந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக, விராட் கோலி (113), ரோஹித் சர்மா (83), சுப்மன் கில் (70) ரன்கள் எடுத்திருந்தன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்த களமிறங்கிய இலங்கை அணி, இந்திய அணியின் அசத்தலான பந்து வீச்சால், சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனக மட்டும் போராடி 108* ரன்கள் எடுத்தார். ஆனாலும், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியில், விராட் கோலி சதம் அடித்ததன் மூலம், சச்சினின் பல சாதனைகளை சமன் செய்தும், முறியடித்தும் உள்ளார்.

அதாவது, சொந்த மண்ணில் அதிக சதம் அடித்த சச்சினின் (20 சதம்) சாதனை விராட் கோலி சமன் செய்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில், ஒரு எதிரணிக்கு எதிராக அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். அதாவது, சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், விராட் கோலி இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் தலா 9 சதங்களை அடித்துள்ளனர். மேலும், சச்சின் ஒருநாள் அரங்கில், 424 வது இன்னிங்ஸில், 45 வது சதம் அடித்தார். ஆனால், விராட் கோலி 257 வது இன்னிங்ஸிலேயே 45 வது சதம் அடித்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here