பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணையும் குழந்தை நட்சத்திரங்கள் – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்தி குடும்பத்தினரின் பிளாஷ் பேக் சீன் வரவுள்ளது. அதில் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது விறுவிறுப்பான பல கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. என்ன தான் பல பிரச்சனைகள் இருந்தாலும் சந்தோஷமான வாழ்க்கையுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வாழ்ந்து வருகிறது. மேலும் முல்லைக்கும், கதிருக்கு இடையே காதல் காட்சிகள் வேறு அடிக்கடி இடம் பெறுகிறது. இதனால் ரசிகர்களும் சந்தோசத்தில் உள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!மேலும் கண்ணனுக்கு வேறு ஜோடி அமைந்துவிட்டது. இப்படி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது கதைக்களம். சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் சிறு வயது கதாபாத்திரம் என்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் இருந்த 2 சிறுவர்கள் ஜீவா, கதிர் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது கண்ணன் கதாபாத்திரமும் காட்டப்பட்டுள்ளது.

‘அரசியல் கூட்டங்களால் தான் கொரோனா பரவுகிறது’ – சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி!!

கண்ணன் குழந்தையாக கதிர், ஜீவாவிடம் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் அது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் தான். அப்படி பார்த்தல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பிளாஷ் பேக் சீன் நடக்கவுள்ளதாக தெரிகிறது. குடும்பத்தில் ஏற்கனவே லோன் விஷயத்தில் பிரச்சனை, ஜனார்த்தனன் வேறு போட்டியாக சூப்பர் மார்க்கெட் திறந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை நஷ்டத்திற்கு போகும் வரைக்கும் செய்துள்ளார்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

அவரது நோக்கமே ஜீவாவை அந்த வீட்டில் இருந்து பிரித்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்து கொள்ள வேண்டும் என்பது தான். இப்பொழுது புதிய கதைக்களத்தை வேறு டைரக்டர் கொண்டுவந்துள்ளார். அப்படி பார்த்தால் சுவாரசியமான சில விஷயங்கள் ரசிகர்களுக்கு காத்துக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here