தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய வழக்கு – கடம்பூர் ராஜுவிற்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன்!!

0
madurai court

தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் விட்டதாக கூறி கடம்பூர் ராஜு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தற்போது கடம்பூர் ராஜுவிற்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கடம்பூர் ராஜு:

தமிழகத்தில் வருகிற மே மாதத்துடன் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் இதற்காக தமிழகத்தில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் மிக தீவிரமாக தங்களது தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனவே இந்த தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சற்று கடினமாகியுள்ளது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தமிழகத்தில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் மிக பரபரப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியை சேர்ந்த கடம்பூர் ராஜு தேர்தல் அதிகாரிகளை மிரட்டியதாக தகவல்கள் வெளியானது.

‘அரசியல் கூட்டங்களால் தான் கொரோனா பரவுகிறது’ – சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி!!

ஊத்துப்பட்டி விலக்கு அருகே கடம்பூர் ராஜு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களை சோதனை செய்ய தேர்தல் அதிகாரிகள் முயற்சி செய்தனர். அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததால் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கூறி கடம்பூர் ராஜு வழக்கு தொடர்ந்து. தற்போது இதனை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம் கடம்பூர் ராஜுவிற்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நேரம் என்பதால் தான் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here