‘அரசியல் கூட்டங்களால் தான் கொரோனா பரவுகிறது’ – சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி!!

0
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் ரூ. 500 அபராதம்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் - மீறினால் ரூ. 500 அபராதம்! சுகாதாரத்துறை செயலர் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அரசியல் கூட்டங்கள் தான் காரணம் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் மிக தீவிரமாக தேர்தல் அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். மேலும் தபால் வாக்குகளை பெரும் பணிகளும் மிக வேகமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தபால் வாக்குகளை வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் வேலையில் கொரோனா பரவல் அதிகமாக பரவி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் தேர்தலை மிக பாதுகாப்பாக நடந்த அனைத்து பாதுகாப்பு பணிகளையும் தேர்தல் அதிகாரிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். மேலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தலுக்காக பிரச்சரம் செய்யும் அரசியல் கட்சிகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நாவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். காரணம் பிரச்சாரத்திற்கு வரும் தொண்டர்கள் அனைவரும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை சுத்தமாக மறந்தே போய்விட்டனர்.

இந்தியாவில் மேலும் 53,480 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை திடுக்கிடும் தகவல்!!

கொரோனா அதிகமாக பரவுவதற்கு இதுவும் ஓர் முக்கிய காரணம். தற்போது இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் எர்முகத்தில் இருந்து வருகிறது. மதக்கூட்டம், உள்ளரங்க நிகழ்வுகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் இருப்பதால் தான் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது என்று தெரிவித்தார். மேலும் மக்கள் அனைவரயும் மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தியும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here