தனது அத்தையின் சதித்திட்டத்தை தெரிந்துகொள்ளும் மீனா – விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியான ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. மீனாவின் அத்தையால் தொடர்ந்து வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மீனா அவரின் அத்தையின் சாதி திட்டத்தை கண்டுபிடித்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து வீட்டில் நிம்மதியில்லாமல் இருக்கின்றனர். இதற்கு ஒட்டுமொத்த காரணமும் மீனாவின் அத்தை தான். இங்கு ஒன்று சொல்லுவது அங்கு ஒன்று சொல்லுவது என பல வம்புகளை எழுத்து வருகிறார். இது முல்லை மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்பொழுது வீட்டை விட்டு வெளியேறுவார் என காத்துக்கொண்டுள்ளனர். நேற்று கூட கண்ணன் ஆசையாக சாப்பிட போக அவரை கேவலமாக பேசி அனுப்பிவிட்டனர். இதனால் கண்ணன் கதறி அழுக மூர்த்தி சமாதானப்படுத்தினார். வீட்டில் உள்ள பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டுள்ளார். தற்போது ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ஜீவாவும், மீனாவும் ரூமில் குழந்தையை கொஞ்சிக்கொண்டிருக்க மீனாவின் அத்தை உள்ளே வருகிறார்.

இப்போல்லாம் குழந்தை கூட இருக்கீங்க போல என்று கேட்கிறார். அடுத்து உங்க அண்ணன் உங்களை விட்டுட்டு சாப்பிட மாட்டாருனு சொன்னிங்க ஆனால் இப்போ உங்க கூட சாப்பிட முடியாதுனு சொல்லி தனியா சாப்பிட்டுட்டாங்க என்று சொல்லுகிறார். இதனால் ஜீவா அதிர்ச்சியடைகிறார்.

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

அடுத்து வெளியில் மூர்த்தி சாப்பிட ஜீவாவை அழைக்க வெளியே வந்த மீனாவின் அத்தை ஜீவா இனி ரூமுக்குலேயே சாப்டுக்குறாராம் என்று சொல்ல ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியாகிறது. இதனை தூரத்தில் இருந்து மீனாவும் கேட்டு விடுகிறார். இத்தனை நாள் இப்படி தான் பண்ணிட்டு திரியிரியா?? என்று கோவமடைகிறார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here