அடக்க ஒடுக்கமான முல்லையை பார்த்திருப்பீங்க, இப்படி ஒரு முல்லையை பார்த்து இருக்கீங்களா?? வைரலாகும் போட்டோஸ்!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் காவியா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மேக்அப் இல்லாத புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகிறது.

நடிகை காவியா

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களை மிகவும் டாப் ரேட்டிங்கில் ஓடிக்கொண்டு இருக்கின்றது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எளிமையான கூட்டு குடும்ப கதைக்களத்துடன் இந்த சீரியல் இருந்ததால் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த சீரியலில் மிகவும் முக்கியமான ஜோடியாக பார்க்கப்படுவது, கதிர் மற்றும் முல்லை ஜோடி தான்.

அந்த முல்லை கதாபாத்திரத்தில் முதன் முதலாக மறைந்த நடிகை சித்ரா தான் நடித்தார். அவருக்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால், அவர் யாரும் எதிர்பாரா வண்ணம் தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர் தான், நடிகை காவியா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிகர் அருணுக்கு தங்கையாக நடித்து வந்தார்.

பின், இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார். ஆரம்பத்தில் மக்கள் இவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதை விரும்பவில்லை. ஆனால், காவியா தேர்ச்சியான நடிப்பினை வெளிப்படுத்தி தற்போது மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக் – இதுதான் காரணமா??

இப்படியாக இருக்க, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தான் மேக்அப் போடாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here