பூவராசியின் நடத்தையில் சந்தேகப்படும் கதிர் – பாரதி கண்ணம்மாவை காப்பி அடிக்கிறாங்களோ?? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலை தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பாணியில் கதையை நகர்த்தி வருகின்றனர். இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் பலரும் கொந்தளித்துள்ளனர்.

பூவே உனக்காக

பூவே உனக்காக சீரியல் தற்போது பிரபலமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. மேலும் கதிர் மற்றும் பூவரசி இடையே தற்போது பல சண்டைகள் ஏற்பட்டு வருகிறது. பூவரசி கர்பமாக இருக்க அதில் தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. ஏற்கனவே பூவரசிக்கும், கதிருக்கு முதலிரவு நடந்து முடிந்தது. கதிர் அப்பொழுது நிதானத்தில் இல்லை என்பதால் அவருக்கு விஷயமும் தெரியாது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் வீட்டில் பிரளயமே ஏற்படுகிறது. அதாவது எதுவுமே நடக்காமல் குழந்தை எப்படி உருவாகும் என்று பூவரசி மீது கோவமடைகிறார் கதிர். வீட்டில் உள்ள அனைவரிடம் வந்து கதிர் கோவமடைகிறார். பூவரசி எவ்வளவு எடுத்து சொல்லியும் கதிர் காது கொடுத்து கேட்பதாக இல்லை. இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பூவரசியை அழைத்துக்கொண்டு கதிர் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தார். அதற்கான ரிசல்ட் வந்துள்ளது.

அதாவது கதிர் அந்த குழந்தைக்கு அப்பா இல்லை என்று ரிசல்ட் வந்துள்ளது. இது எப்படி சாத்தியம். யார் டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. இப்படி ட்விஸ்டுடன் பூவே உனக்காக சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா போல ஆரம்பிக்கிறீர்களா?? என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். ஒருவேளை பாரதி கண்ணம்மா வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அந்த கான்செப்ட்டை இதிலும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here