பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்? அப்போ சீரியலை இழுத்து மூட வேண்டியது தான்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்? அப்போ சீரியலை இழுத்து மூட வேண்டியது தான்!!
பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்? அப்போ சீரியலை இழுத்து மூட வேண்டியது தான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

விலகும் பிரபலம்:

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் கதிர் என்ற பாத்திரத்தில், ஆரம்பத்தில் இருந்து நடித்து வருபவர் நடிகர் குமரன். சினிமாவில் ஒரு சிறந்த ஹீரோ மற்றும் இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்டு சினிமாவிற்குள் வந்த இவர், ஒரு மிகச் சிறந்த நடன கலைஞரும் கூட. தற்போது, நடிகர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள வதந்தி என்ற வெப் சீரிஸில், இவர் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்த பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இதனால் இவர் இந்த சீரியலில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இவருக்கு ஜோடியாக முல்லை பாத்திரத்தில் நடித்த காவியா இதிலிருந்து விலகி உள்ள நிலையில், தற்போது இவரும் விலக இருப்பதாக பேசப்படுகிறது.

சூர்யாவுக்கு இது செட் ஆகாது.,ஸ்கெட்ச் போட்ட தூக்கிய பாலா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இதனால், சீரியலுக்கான மார்க்கெட் கண்டிப்பாக குறைந்துவிடும் என சேனல் நிர்வாகத்தால் அஞ்சப்படுகிறது. இருந்தாலும் இதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here