மிளகு சிக்கன் கறி இப்படி செஞ்சுருக்கீங்களா? மழைக்கு சும்மா நறுக்குன்னு ஒரு ரெசிபி! Try பண்ணுங்க!!

0
மிளகு சிக்கன் கறி இப்படி செஞ்சுருக்கீங்களா? மழைக்கு சும்மா நறுக்குன்னு ஒரு ரெசிபி! Try பண்ணுங்க!!
மிளகு சிக்கன் கறி இப்படி செஞ்சுருக்கீங்களா? மழைக்கு சும்மா நறுக்குன்னு ஒரு ரெசிபி! Try பண்ணுங்க!!

Non வெஜ்னாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது சிக்கன் தான். அந்த சிக்கனை வைத்து ஒரு காரசாரமான ஒரு ரெசிபி பண்றது எப்படின்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • சிக்கன் -1/2
  • தக்காளி – 2
  • சின்ன வெங்காயம் -5
  • பச்சை மிளகாய் – 4
  • பட்டை, கிராம்பு -சிறிதளவு
  • மிளகு,சீரகம், சோம்பு,மல்லி -50 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -2 ஸ்பூன்
  • மிளகுத்தூள் -2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள். -1 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • நல்லெண்ணெய் _3 ஸ்பூன்
  • எலுமிச்சை பழம் -1

செய்முறை விளக்கம்:

இந்த பெப்பர் சிக்கன் செய்வதற்கு,முதலில் சிக்கனை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சிறிதளவு சேர்த்து அதில் ஒரு எலுமிச்சை பழ சாறை சேர்த்துக் கொள்ளவும்.பின் ஒரு கடாய் எடுத்து அதில் பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், சோம்பு, மல்லி சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும், பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக வதக்கி,பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். அதோடு நாம் மசால் சேர்த்து தயார் பண்ணி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

தலை முடி முட்டிக்கு கீழ வரணுமா? இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்க!இதுல இவ்ளோ சிறப்பு இருக்கு!!

பிறகு நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசால் பொருட்களை இதில் சேர்த்து நன்றாக வதக்கி பின் தண்ணீர் சேர்க்காமல் மூடி வைக்கவும்.5 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்து கொத்தமல்லி இலைகளை இதோடு சேர்த்து தூவி இறக்கவும். இப்போ நமக்கு சுட சுட காரசாரமான மிளகு சிக்கன் கறி ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here