சீக்ரெட்டாக நடந்த தளபதி 67 பட பூஜை.., லோகேஷ் என்ன இது? முதல் நாளே இப்படியா பண்ணுவீங்க?

0
சீக்ரெட்டாக நடந்த தளபதி 67 பட பூஜை.., லோகேஷ் என்ன இது? முதல் நாளே இப்படியா பண்ணுவீங்க?
சீக்ரெட்டாக நடந்த தளபதி 67 பட பூஜை.., லோகேஷ் என்ன இது? முதல் நாளே இப்படியா பண்ணுவீங்க?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தளபதி 67 :

கோலிவுட் வட்டாரங்களில் உச்சத்தைத் தொட்ட நடிகர்கள் ஒருவராக விளங்குபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது. அதற்கான பணிகளில் பட குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகரின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான தளபதி 67 படத்தில் நடிப்பதற்கு நடிகர் விஜய் தன்னை தயார் செய்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் எடுக்க இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படத்தில் நடிகர் விஜய் 40 வயது கேங்ஸ்டராக நடிக்க இருக்கிறார். இந்நிலையில் படத்தைக் குறித்து ஒரு முக்கியமான அப்டேட் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த பூஜையில் பிரபலங்களின் செல்பேசி அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு இது செட் ஆகாது.,ஸ்கெட்ச் போட்ட தூக்கிய பாலா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கூடிய விரைவில் பூஜையின் வீடியோ மற்றும் போட்டோஸ் எல்லாம் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து வெளியாகும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி 67 படம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here