ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா…, சொந்த மண்ணில் பதிலடி கொடுப்பார்களா??

0
ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா..., சொந்த மண்ணில் பதிலடி கொடுப்பார்களா??
ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்தியா..., சொந்த மண்ணில் பதிலடி கொடுப்பார்களா??

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்த நிலையில், உலக கோப்பையில் இதற்கு பதிலடி கொடுப்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs AUS:

உலக கோப்பை ஹாக்கி போட்டி ஜனவரி மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ளது. இந்த உலக கோப்பைக்கு முன் பயிற்சி பெரும் விதமாக, இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், நேற்று கடைசி போட்டி அடிலெய்டி மைதானத்தில் நடைபெற்றது.3-1 என நம்பர் ஒன் அணியான ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியின், முதல் பாதியில் ஆஸ்திரேலிய அணி 5-2 என்ற வலுவான நிலையில் இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியின், கடைசி நிமிடங்களான 55வது, 60வது நிமிடங்களில் சுக்ஜித் சிங்கும், கேப்டன் ஹர்மன்பிரீத்தும் தலா ஒரு கோல் அடிக்க இந்திய அணி 4-5 என போராடி தோற்றது.

ஆசிய ஜூனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்திய இளம் வீரர்கள்…, குவியும் பாராட்டுக்கள்!!

இதுவரை நடந்து முடிந்த 5 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி, 5-4, 7-4, 3-4, 5-1, 5-4 என்ற கோல்கள் கணக்கில் 4-1 என தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் மீதமுள்ள 4 போட்டிகளில் போராடி தான் தோற்றுள்ளது. ஒரு பலம்வாய்ந்த அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது சவாலான விஷயம். இதனால், அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பையில், ஆஸ்திரேலிய அணிக்கு, தனது சொந்த மண்ணில் இந்திய அணி பதிலடி தரும் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here