சூர்யாவுக்கு இது செட் ஆகாது.,ஸ்கெட்ச் போட்ட தூக்கிய பாலா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
சூர்யாவுக்கு இது செட் ஆகாது.,ஸ்கெட்ச் போட்ட தூக்கிய பாலா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
சூர்யாவுக்கு இது செட் ஆகாது.,ஸ்கெட்ச் போட்ட தூக்கிய பாலா! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இயக்குனர் பாலா படைப்பில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் வணங்கான் திரைப்படம் குறித்து ஒரு முக்கிய தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

வணங்கான்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் படைப்பில் வாடிவாசல், பாலா இயக்கத்தில் வணங்கான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் பாலா இயக்கும் வணங்கான் திரைப்படம் குறித்து ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து இயக்குனர் பாலா வெளியிட்ட அறிக்கையில், நானும் என் தம்பி சூர்யாவுடன் இணைந்து இந்த படத்தை உருவாக்க விரும்பினேன். ஆனால் இந்த கதை கொஞ்சம் மாற்றங்கள் செய்திருப்பதால் சூர்யாவுக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் நான் கொஞ்சம் பயப்பட்டேன்.

தலை முடி முட்டிக்கு கீழ வரணுமா? இந்த ஹேர் பேக்கை யூஸ் பண்ணுங்க!இதுல இவ்ளோ சிறப்பு இருக்கு!!

ஆனால் சூர்யாவுக்கு என் மீது என் கதையின் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுக்கு கடுகு அளவு கூட சங்கடம் ஏற்படுத்த கூடாது என்பதால் அவரை படத்தில் இருந்து விலகியுள்ளார். இந்த முடிவை நாங்கள் இரண்டு பேருமே கலந்து யோசித்து எடுத்த முடிவு என்று பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here