மீனா, தனத்தை வெறுப்பேற்றி வேடிக்கை பார்க்கும் ஐஸ்வர்யா – இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதிர் இத்தனை பிரச்சனைகளுக்கு பிறகு பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வீட்டிற்கு வர மல்லி, கதிரை அசிங்கப்படுத்துகிறார். இதனால் கோவமடையும் முல்லை கதிரை அழைத்து கொண்டு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி இறந்ததற்கு பிறகு வீடே சோகமாக இருக்க தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டுள்ளது. கண்ணனையும் ஓரளவிற்கு குடும்பம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில் கதிர் பார்வதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வீட்டிற்கு செல்கிறார்.

pandian stores

அப்பொழுது மல்லி கதிரை கண்டபடி பேசி விடுகிறார். இது தெரிந்து கொண்ட முல்லை பார்வதி வீட்டிற்கு வந்து எதுக்கு தேவையில்லாம அவரை ரொம்ப பேசின என்று சத்தம் போடுகிறார். மூர்த்தி வீட்டில் அனைவரும் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டிருக்க அப்பொழுது முல்லை கதிரும் கோவமாக வருவதை பார்த்து என்ன என்று விசாரிக்கின்றனர்.

அப்பொழுது மல்லி பேசியதை சொல்ல தனத்திற்கு கோவம் வருகிறது.  முல்லை செய்தது சரி தான் என்று சொல்லி பாராட்டுகிறார். மேலும் கயல் அப்பொழுது தவழ்ந்து கொண்டே நடக்க ஆரம்பிக்க குடும்பமே சந்தோஷமாகிறது. அடுத்ததாக கண்ணன் ஐஸ்வர்யா பேசி கொண்டுள்ளனர்.

அப்பொழுது கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கஸ்தூரி பார்த்த வீடு உனக்கு பிடிச்சு இருக்கு தானே என்று கேட்கிறார். உன் கண்ணுல நான் அதை பார்த்தேன். பேசாம அந்த வீட்டுக்கு போயிடுவோமா?? என்று சொல்கிறார். மேலும் அண்ணன் தவறாக எடுத்து கொள்வாரோ என்று பயமாக இருப்பதாக சொல்கிறார்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொல்லி சமாதானம் செய்கிறார் ஐஸ்வர்யா.  அடுத்ததாக காலையில் மூர்த்தி வீட்டிற்கு எதிர் வீட்டிற்கு ஐஸ்வர்யா வர அப்பொழுது மீனா வாசல் தெளித்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஷாக் கொடுக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா அந்த வீட்டில் கோலம் போடுவது போன்று நடிக்கிறார்.

இதனை பார்த்த மீனா ஷாக்காகி ஒரு வேளை இங்க குடி வந்துட்டாங்களோ என்று சந்தகமடைந்து தனத்தை அழைத்து வருகிறார். தனம் வந்ததும் செலஃபீ எடுப்பது போன்று நடிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here